Devan Ulagorai Neasitha – தேவன் உலகோரை நேசித்த
1. தேவன் உலகோரை நேசித்த அன்பால்
தம் சுதனைத்தந்தே மகிமைப்பட்டார்;
பாவ நிவிர்த்திக்காய் தம்முயிர் தந்து
யாவர்க்கும் ஜீவ பாதையைத் திறந்தார்
போற்றுவோம் கர்த்தரை!
பூலோகம் முழங்க!
போற்றுவோம் கர்த்தரை!
மாந்தர் மகிழவே!
வாரும் பிதாவிடம் இயேசுவினூடே
மகிமை தருவீர் வல்லவருக்கே
2. தேவன் தமின் மீட்பும் இரட்சிப்பும் எல்லா
விசுவாசிகட்கும் நல்குவே னென்றார்!
இயேசுவை உண்மையாய் நம்பும் பாவிக்கும்
மன்னிப்பு அட்சணமே கிட்டுது பார் – போற்று
3. தேவன் பெரும் போதனை சாதனையும்
செய்தார் அதால் மகிழ்வோம் இயேசுவில் நாம்
ஆனந்தம் ஆச்சரியம் சுத்தம் உயர்வும்
அடைவோம் இயேசுவை நாம் காணும்போது – போற்று