ஈசனே கிறிஸ்தேசு நாயகனே – Eesanae kiristhesu Naayakanae

Deal Score+1
Deal Score+1

ஈசனே கிறிஸ்தேசு நாயகனே – Eesanae kiristhesu Naayakanae

பல்லவி

ஈசனே! கிறிஸ்தேசு நாயகனே! உன்றன்
இராஜ்யம் வருவதாக!
ஈசனே! கிறிஸ்தேசு நாயகனே!

சரணங்கள்

1.பாசமுறும் எழில் பரலோக ராஜியம் வருக!
பாரில் நரர் உயர் தர வாழ்வு பெறுக!
நேச அன்பின் அருட்பிரகாச நெறிநேர் பெருக!
நீச அநியாய இருள் தேசத்தில் நில்லாதொழிக! ஈச

2.நல்லறிவு என்னும் கலம் நாடும் சமத்துவ பலம்
வல்லமைக்குன்றாய்த் திகழும் வாய்மையாம் நலம்
எல்லோருமே யாம் ஓர்குலம் ஏகதாயின் சேயர் எனும்
பல்லவியைப் பாடும் உளம் கொள்ளுவதாக இந்நிலம்.- ஈச

3.அஞ்ஞானம் வேரோடழிய அலகையின் பேரொழிய
அத்தன் உனைப் பார் அறிய ஆவிக்குரிய
மெய்ஞ்ஞான அனலெரிய விண்ணவா! நீயே பெரிய
வேந்தனாய் ஆட்சி புரிய வேண்டும் அருள்தா நிறைய.- ஈச

Eesanae kiristhesu Naayakanae song lyrics in English

Eesanae kiristhesu Naayakanae Untran
Rajyam Varuvathaga
Eesanae kiristhesu Naayakanae

1.Paasamurum Ezhil Paraloga Rajiyam Varuga
Mannil Narar Uyarthara Vaazhu Peruga
Neasa Anbin Arutpirakasa Neari Near Peruga
Neesa Aniyaaya Irul Deasathil Nillatholiga

2.Nallarivu Ennum Kalam Naadum Samathuva Balam
Vallamaikkuntraai Thigalum Vaaimaiyaam Nalam
Ellorumae Yaam Oor Kulam Yeaga Thaayin Seayar Enum
Pallaviyai Paadum Ulam Kolluvathaga Innilam

3.AnGnanam Vearodau Aliya Alagaiyin Pearoliya
Aththan Unai Paar Ariya Aavikuriya
MeiGnanan Analeariya Vinnavaa Neeyae Periya
Veanthanaai Aatchi Puriya Vendum Arul Tha Niraiya

நான் வந்து உங்களைக் கண்டாலும், நான் வராமலிருந்தாலும், நீங்கள் ஒரே ஆவியிலே உறுதியாய் நின்று, ஒரே ஆத்துமாவினாலே சுவிசேஷத்தின் விசுவாசத்திற்காகக் கூடப்போராடி, எதிர்க்கிறவர்களால் ஒன்றிலும் மருளாதிருக்கிறீர்களென்று உங்களைக்குறித்து நான் கேள்விப்படும்படி, எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராகமாத்திரம் நடந்துகொள்ளுங்கள்.
Only let your conversation be as it becometh the gospel of Christ: that whether I come and see you, or else be absent, I may hear of your affairs, that ye stand fast in one spirit, with one mind striving together for the faith of the gospel;
பிலிப்பியர் : Philippians:1:27

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo