Elshadai Enthan Thunai Neere – எல்ஷடாய் எந்தன் துணை நீரே
Elshadai Enthan Thunai Neere – எல்ஷடாய் எந்தன் துணை நீரே
எல்ஷடாய் எந்தன் துணை நீரே
என் வாழ்வின் கேடகம்
எண்ணில்லா நன்மைகள்
என் வாழ்வில் செய்தீரே
எந்தன் வாழ்வின் பெலன் நீரே
காலை தோறும் கிருபை பொழியும்
கிருபையே ஸ்தோத்திரம்
உந்தன் நாமம் எந்தன் இன்பம்
உமது செட்டை அடைக்கலம்
இம்மட்டும் என்னை காத்து நடத்தின
எபனேசரே ஸ்தோத்திரம்
எந்த நாளும் கூட இருக்கும்
இம்மானுவேலே ஸ்தோத்திரம்
யேகோவாயீரே எந்தன் தேவைகள்
பார்த்துக் கொள்வீரே
எந்தன் வாழ்வின் சமாதானமே
யேகோவா ஷாலோம் ஸ்தோத்திரம்
யேகோவா ராஃப்பா
எந்த நாளும் எந்தன் பரிகாரி
எந்த நாளும் வெற்றி தருவீர்
யேகோவா நிசியே ஸ்தோத்திரம்