எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே – Em Uyarntha Vaasthalam lyrics
எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே – Em Uyarntha Vaasthalam lyrics
எம் உயர்ந்த வாசஸ்தலமதுவே எம் பூரண சீயோனே
கன்மலையின் மேலே கழுகுபோல் உன்னதத்தில் வாழ்வோம் –
இயேசு பக்தர்களே ஜெயம் பெற்றே
பிதா முகம் காண்போம்
1.ஞானக் கன்மலையே
கிறிஸ்தேசு எம் அரணே வான சீயோனிலே
அவர் ஆவியால் பிறந்தோம் ஏழு தூண்களுடன்
திட அஸ்திபாரமுடன் ஏசுவின் மேல்
நின்று வீடாய் நாமிலங்கிடுவோம்
2.அன்பின் பூரணமே அதிலே பயமில்லையே
அன்பர் இயேசுவிடம் அதை நாடி பெற்றிடவே
ஆவியால் நிறைந்தே அவர் அன்பிலே நடந்தே
ஆ!பேரின்ப ஆத்ம வாழ்வில் ஆனந்தங் கொள்வோம்
3.மாசாமாதானமே விசுவாச நம்பிக்கையே
மா பரிசுத்தமே மரணத்தின் பாடுகளே
தேவ சாயலுமே நம்மில் பூரணம் அடைய
தூய வாழ்வை நாடி நாம் முன்னேறியே செல்வோம்
4.ஓட்டமே ஜெயமாய் நாமும்
ஓடியே முடிக்க ஒவ்வொரு தினமும்
புதிய பெலனடைவோம்
பாவ சாபங்களும் புவி ஆசையும்
ஜெயித்தோர் பாழுலகை வேகம் தாண்டி அக்கரை சேர்வோம்
5.வானங்கள் வழியே இறங்கி பரன் வருவார்
வாஞ்சையாய் சபையாய் அன்று யேசுவை சந்திப்போம்
மீட்பின் நாள் நெருங்க தலைகள் உயர்த்திடுவோம்
மத்திய வான விருந்தில் நாமே பங்கடைந்திடுவோம்