என் வாழ்வின் முழு – En Valvin Mulu Eakkamellam
என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மோடு இருப்பதுதான் -2
இரவும் பகலும் உம்மோடுதான் இருப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மோடுதான் இருப்பேன்
எப்போதுமே உம்மோடுதான் இருப்பேன்
அல்லேலூயா (4)
1.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம் -(உம்)
புகழ் பாடி மகிழ்வதுதான் – 2
இரவும் பகலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
என்ன நேர்ந்தாலும் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
எப்போதுமே உம் புகழ்பாடி மகிழ்ந்திருப்பேன்
2.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம்மை நேசித்து வாழ்வதுதான் -2
இரவும் பகலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
என்ன நேர்ந்தாலும் உம்மைத்தான் நான் நேசிப்பேன்
எப்போதுமே உம்மைத்தான் நான் நேசிப்பேன்
3.என் வாழ்வின் முழு ஏக்கமெல்லாம்
உம் சித்தம் செய்வதுதான் -2
இரவும் பகலும் உம் சித்தம் செய்திடுவேன்
என்ன நேர்ந்தாலும் உம் சித்தம் செய்திடுவேன்
எப்போதுமே உம் சித்தம் செய்திடுவேன்