En Yesu Thunayirukka – என் இயேசு துணையிருக்க song lyrics
என் இயேசு துணையிருக்க
என்ன பயம் எனக்கு
காரிருளோ கடும் புயலோ
கனவில் தோன்றும் பயங்கரமோ
பாதை மாறி சென்றிடேன்
பரமன் அவரே துணையானார்
காலம் யாவும் காக்கும் தேவன்
கரத்தில் அடைக்கலம் புகுந்திட்டேன் (2)
(என் இயேசு துணையிருக்க….
வாழ்க்கை துன்பம் திணறினேன்
வழியில் அவரே துணையானார்
கரத்தில் ஏந்தி மடியில்
அவரே தாலாட்டு பாடினார்
(என் இயேசு துணையிருக்க….