enakkai varukintavar miga lyrics
எனக்காய் வருக்கின்றவர் மிக
விரைவினில் வந்திடுவர்
சமீபமே முடிவல்லவோ
நேசரை சந்திக்கவே
தூய இரத்தம் எனக்காக சிந்தினதால்
தூய்மையாக்கி என்னை அவர் நிறுத்திடுவர்
தூதரோடு நின்று அவரை நான்
துதித்தென்றும் மகிழ்ந்திடுவேன்
1. ஜெப ஆவி தந்திடுமே
மன்றாடி நான் ஜெபித்திடவே
சுத்தரோடு சுத்தனாகவே
மேகமீதில் சென்றிடவே
2. சோதனை வந்திட்டாலும்
வழுவாது காத்திடுவர்
மகிபனின் சந்நிதியில்
மசற்றோனாய் நின்றிடுவேன்
3. யார் இந்த வெண்கூட்டம்
உலகமே அதிசயிக்கும்
இரத்தத்தாலே கழுவப்பட்டு
மீட்கப்பட்டோர் இவர்களல்லோ
4. பல கணி தீவிரிக்கும்
வான்புறா நானால்லவா
நேசரவர் என்னுடையவர்
நான் அவர் மார்பினிலே