எங்கள் ஜெபங்கள்- Engal Jebangal Thoobam
எங்கள் ஜெபங்கள் தூபம் போல
உம் முன் எழ வேண்டுமே
1. ஜெபிக்கும் எலியாக்கள்
தேசமெங்கும் எழவேண்டும்
உடைந்த பலிபீடம் ( உறவுகள் )
சரிசெய்யப்பட வேண்டும்
தகப்பனே ஜெபிக்கிறோம் (2)
2. பரலோக அக்கினி
எங்கும் பற்றியெரிய வேண்டும்
பாவச்செயல்கள் .
சுட்டெரிக்கப்பட வேண்டும்
3. தூரம் போன ஜனங்கள்
உம் அருகே வரவேண்டும்
கர்த்தரே தெய்வமென்று
காலடியில் விழவேண்டும்
4. பாகால்கள் இந்தியாவில்
இல்லாமல் போக வேண்டும்
பிசாசின் கிரியைகள்
முற்றிலும் அழிய வேண்டும்
5. பாரத தேசத்தை
ஜெபமேகம் ரூட வேண்டும்
பெரிய காற்று அடித்து
பெருமழை பெய்ய வேண்டும்