Ennai Kandeer – என்னை கண்டீர்

Deal Score+1
Deal Score+1

Ennai Kandeer – என்னை கண்டீர்

என்னை கண்டீர்
என்னில் என்ன கண்டீர் ?
மீட்டுக்கொள்ள சொந்த ஜீவன் தந்தீர்
கண்ணுக்குள்ளே என்னை வைத்து
கண்மணி போல் காத்து வந்தீர்

வாழ வைத்தவரே இயேசுவே
உமக்காய் வாழ்ந்திடுவேன்
ஜீவன் அளித்தவரே இயேசுவே
என் ஜீவன் தந்திடுவேன்-என்ன கண்டீர்

1.தூரம் சென்றாலும்
துக்கம் தந்தாலும்
தூக்கி எறியாமல்
தேடி வந்தீரே-2
தூயவர் உம் தோளில்
தூக்கி சென்றீரே-என்னை கண்டீர்

2.மங்கி எரிகின்ற
திரியை போலானேன்
மடிந்து போகாமல்
ஏற்றி வைத்தீரே-2
மறுபடியும் தூண்டி
எரிய வைத்தீரே-என்னை கண்டீர்

3.உலகம் பெரிதென்று
உம்மை விட்டு சென்றேனே
உதறி தள்ளாமல்
உதவி செய்தீரே-2
உருக்கமாய் வந்தென்னை
சேர்த்துக்கொண்டீரே-என்னை கண்டீர்

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo