Ennai Meetkavae Poovil Vantheerae – என்னை மீட்கவே பூவில் வந்தீரே
என்னை மீட்கவே
பூவில் வந்தீரே
எந்தன் சாபங்களை நீக்கி
வாழ்வு தந்தீரே
தூதர் போற்றவே
மகிமையில் பிறந்தீரே
உலகில் மகிழ்வையும்,
சமாதானம் தந்தீரே
விண்ணை விட்டு மண்ணில் வந்து
பாவி என்னைச் சேர்த்துக் கொண்டீர்
உந்தன் அன்பை எனக்குத் தந்து
எந்தன் வாழ்வில் பல நன்மைகளைக்
காணச் செய்தீர்
பிறந்தாரே இம்மானுவேல்
என்றென்றும் நம்மோடு இருப்பவரே
உதித்தாரே இரட்சகரே
என்றென்றும் அரசாளும் ராஜா நீரே
இருள் நிறைந்த உலகினிலே
ஒளியாக பிறந்தீரே
தம்மை தாம் வெறுமையாக்கி
பிதா சித்தம் செய்ய மனிதனானீர்
அன்று நீர் பிறந்தீரே உலகினிலே
மக்களின் மகிழ்வாகவே
இன்று நீர் பிறந்தீர் என் உள்ளத்திலே
என் பாவங்கள் போக்கிடவே
சோர்வுற்ற நேரத்திலே
பெலனாக பிறந்தீரே
கட்டுகள் , நோய்களெல்லாம்
விடுவிக்க வந்தவரே
நீரே என்னோடு இருப்பதாலே
பயங்கள் விலகிடுதே
உம் நாம்ம சொன்னால் அதுபோதுமே
அதிசயம் நிகழ்ந்திடுமே…