ENTHAN YESAIAH ENTHAN YESAIAH – எந்தன் இயேசையா LYRICS
எந்தன் இயேசையா எந்தன் இயேசையா
உம் அன்பென்றும் பெரிதையா
என் வாழ் நாளெல்லாம் உம் அன்பை நான் நினைத்து
எந்நாளும் போற்றிடுவேன்
1. குருசினில் தொங்கி குருதியும் சிந்தி
பாவங்கள் போக்கி அணைத்தீரையா (2)
என் உள்ளம் பொங்கும் உம்மையே துதிக்கும்
உயிரின் ஜீவன் நீர்தானையா (2) — எந்தன்
2. உலகம் என்னை வெறுத்த போது
கரங்கள் நீட்டி அணைத்தீரையா (2)
உம் அன்பு என்றும் ஆறுதல் அளிக்கும்
என் வாழ்வே என்றும் நீர்தானையா (2) — எந்தன்