Idaividamal Aarathikkum – இடைவிடாமல் ஆராதிக்கும்
Idaividamal Aarathikkum – இடைவிடாமல் ஆராதிக்கும்
இடைவிடாமல் ஆராதிக்கும்
உன் தேவன் தப்புவிப்பார்
இமைப்பொழுதும் தூங்காமல்
கண்மணிபோல் காப்பார்
அல்லேலூயா….
சிங்கத்தின் குகையில் போட்டாலும்
சிங்கம் சேதப்படுத்தவில்லை
அக்கினி நடுவில் நடந்தாலும்
எரிந்து போவதில்லை
சிங்கத்தின் வாயைக் கட்டினார்
அக்கினி நடுவில் இறங்கினார்
பவுலும் சீலாவும் துதித்த போது
சிறையே அதிர்ந்தது
சீறிடும் புயலில் சீடர்கள் படகில்
சீற்றம் அடங்கியது
சிறைத்தலைவனை இரட்சித்தார்
சீறும் புயலினை அடக்கினார்