Idho Nesa Palan Pullanaiyil – இதோ நேச பாலன் புல்லனையில்
இதோ நேச பாலன் புல்லனையில்
ஏழை கோலமாக தோன்றினார்
மனு பாவம் போக்க வந்துதித்தார்
திவ்ய அற்புத பாலனானார்
அவதாரமே அன்பின் ரூபமே
அன்னை மரியின் மகனாய்
புவியில் தோன்றினாரே
அருள் ஜோதியே அமலாதிபன்
இன்று பாலனாக ஜெனித்தார்
1.சமாதானம் நல்கும் பாலன்
சந்தோஷம் அளிக்கும் ஜீவன்
நீர் ஏழ்மையின் கோலத்தில் வந்தீர்
நீர் தாழ்மையின் ரூபமாய் வந்தீர்
அவர் திரு நாமம் உன்னதத்தில் ஓங்கிட பாடிடுவோம்
2. தினம் தினம் உம்மை காண
அனுதினம் உம்மில் வளர
நீர் என்னுள் பிறந்தீரே நாதா
நீர் எனக்காய் வந்தீரே தேவா
நான் அனுதினமும் உம்மை எண்ணி உமக்காய் வாழ்ந்திடுவேன்.