Ilangar Neasaa Anbarae – இளைஞர் நேசா அன்பரே
1. இளைஞர் நேசா, அன்பரே,
அடியேனை உம் சொந்தமாய்
படைத்திட சமூலமாய்,
ஆண்டவா, கர்த்தா – நான் வந்தேன்.
2. இளமைக் காலை என்னையே
படைப்பேன் வாக்குப்படியே,
பின்வையேன் ஒன்றும் – இப்போதே
பூரண ஆவலாய் வந்தேன்.
3. ஒளியில் என்றும் ஜீவிப்பேன்
நீதிக்காய் என்றும் உழைப்பேன்
முழுபலத்தால் சேவிப்பேன்
உம்மண்டை ஆதலால் வந்தேன்.
4. சிறியேன் திடகாத்திரன்;
சத்தியம், நீதி, உமக்காய்
ஜீவிப்பேன் நல்லுத்தமனாய்;
ஜீவாதிபதி – நான் வந்தேன்.
5. பொன், புகழ், சித்தி, இன்பமும்
மேன்மையாய்த் தோன்றும் – ஆயினும்
விஸ்வாசமே மேல் நாட்டமாய்
ஜீவநாள் முற்றிலும் – வந்தேன்.
6. உமக்காய் மேன்மை யடைய,
ஜெயித்து கிரீடம் சூடிட,
பணிந்தும் பாதம் படைக்க,
ஆண்டவா, கர்த்தா – நான் வந்தேன்.