Innaal Ratchipukettra Nal Naal – இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள்
பல்லவி
இந்நாள் இரட்சிப்புக்கேற்ற நல் நாள்
ஏற்ற நல் நாள், ஏற்ற நல் நாள்
அனுபல்லவி
சொன்னார் கிறிஸ்துனக்குக்
கிருபையைச் சொரிந்து
சரணங்கள்
1. வாடித் திகைத்துப் புலம்பாதே – உந்தன்
மனதில் அவிசுவாசம் வைத்துக் கலங்காதே – இந்நாள்
2. இனிமேலாகட்டு மென்றெண்ணாதே – பாவ
இனிமை மேற்கொண்டுய்ய உன்னால் ஒண்ணாதே – இந்நாள்
3. பாடுபட்ட கிறிஸ்தைப்பாரு – உந்தன்
பாவங்கள் நீங்க அவ ருதிரத்தைச் சேரு – இந்நாள்
4. உலக சிநேகம் வெகுக் கேடு – அதில்
உடந்தைப்படாமல் ஜீவ மார்க்கத்தைத் தேடு – இந்நாள்
5. இதுவே தகுதியான காலம் – இதை
இழந்து விடாமல் பற்றிக் கொண்டாலனுகூலம் – இந்நாள்