Jaya Raja Kodi Yettrikaattiyae ஜெய ராஜ கொடி ஏற்றிக்காட்டியே
1. ஜெய ராஜ கொடி ஏற்றிக்காட்டியே
யுத்தஞ் செய்யச் செல்லுவோம்
வெற்றி மாலை சூடி ஜெயம் பெறவே
பூரிப்போடு பாடுவோம்
செல்லுவோம், வெல்லுவோம்
நல் மீட்பர் நாமம் மூலமாய்
வெற்றி சிறப்பார், ஆளுவார்
பூமி எங்கும் ஜோதியாய்
2. எதிர் சேனை சீறிப் பாய்ந்து வரினும்
ராஜ கொடி காட்டுவோம்
திரள் கூட்டமே போராட்டஞ் செய்யினும்
வெற்றி வேந்தராகுவோம்
3. எந்தச் தேச ஜாதி பாஷைக் காரரும்
சுவிசேஷங் கேட்பதால்
யேசு நாதர் மாண்பாய் ஆளும் காலமும்
மா சமீபமானதால்
4. அந்த நல்ல காலம் வந்தவுடன்
ராஜரீகம் பண்ணுவார்
அவபக்தி யாவும் ஒழிந்திடவே
நீதிமுறை நாட்டுவார்