KANEERIN JEBATHAI கண்ணீரின் ஜெபத்தை – உம் கிருபையே – Tamil Christian Song

Deal Score0
Deal Score0

கண்ணீரின் ஜெபத்தை கேட்டீரைய்யா
கரம்பிடித்தென்னை நடத்தினீரே-2
வறட்சியை கண்ட நாட்களுக்கீடாய்
செழிப்பை காண செய்தீர்-2

நன்றி ஐயா நன்றி ஐயா
நன்மை செய்தீர் நன்றி ஐயா
நன்றி ஐயா நன்றி ஐயா
நடத்தி வந்தீர் நன்றி ஐயா
– கண்ணீரின் ஜெபத்தை

என் துயர் மாற்றிய தூயவரே
என் பயம் அகற்றிய சிநேகிதரே-2
-நன்றி ஐயா

குறைவுகள் நிறைவாய் மாற்றினீரே
தோல்விகள் ஜெயமாய் மாற்றினீரே-2
-நன்றி ஐயா

வியாதிகள் நீக்கிய வைத்தியரே
பாவங்கள் போக்கிய பரிகாரியே-2
-நன்றி ஐயா

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo