Kanniyin Madiyil Vantharae – கன்னியின் மடியில் வந்தாரே
கன்னியின் மடியில் வந்தாரே – தேவன்
உலகை மீட்க வந்தாரே
பாவம் போக்க வந்தாரே – மீட்பர்
பாதை காட்ட வந்தாரே
உலகின் ஒளியாய் நீதியின் சூரியன்
பூமியில் உதித்தார் யெஷுவா
விண்ணில் இருந்து இம்மண்ணில் வந்து
மைந்தனாய் பிறந்தார் யெஷுவா
குருடரை பார்க்க செய்தார்
முடவரை நடக்க செய்தார்
செவிடரை கேட்க செய்தார்
கட்டுக்களை உடைத்தெறிந்தார்
வாழ்வை மீட்டு தந்தார்
வெற்றி சிறந்தவர் இவரே
உலகின் ஒளியாய் நீதியின் சூரியன்
பூமியில் உதித்தார் யெஷுவா
விண்ணில் இருந்து இம்மண்ணில் வந்து
மைந்தனாய் பிறந்தார் யெஷுவா
நீதியின் தேவன் இவர்
இரட்சிப்பின் தேவன் இவர்
நம்முடைய மீட்பரும் இவரே
பாவத்தை விட்டகன்று
சாட்சியாய் வாழ்ந்திடவே
நம்மை அழைப்பவர் இவரே
உலகின் ஒளியாய் நீதியின் சூரியன்
பூமியில் உதித்தார் யெஷுவா
விண்ணில் இருந்து இம்மண்ணில் வந்து
மைந்தனாய் பிறந்தார் யெஷுவா (2)