Kartharin Puyamae – கர்த்தரின் புயமே
கர்த்தரின் புயமே கர்த்தரின் புயமே
எனக்காய் யுத்தம் செய்ய எழும்பு
கர்த்தரின் புயமே கர்த்தரின் புயமே
எமக்காய் வழக்காட எழும்பு
கர்த்தரின் புயமே கர்த்தரின் புயமே
எமக்காய் யுத்தம் செய்ய எழும்பு
கர்த்தரின் புயமே கர்த்தரின் புயமே
எனக்காய் வழக்காட எழும்பு
இறாகாப்பை துண்டித்த்தும்
உம் புயம் அல்லவா
வலு சர்பத்தை வதைத்ததும் உம் புயம் அல்லவா
எமக்காய் எழும்பிடும் புயம் அல்லவா உம் புயம் அல்லவா
“எழும்பு, எழும்பு, பெலன்கொள்; கர்த்தரின் புயமே, முந்தின நாட்களிலும் பூர்வ தலைமுறைகளிலும் எழும்பினபடி எழும்பு; இராகாபைத் துண்டித்ததும் வலுசர்ப்பத்தை வதைத்ததும் நீதானல்லவோ?”
— ஏசாயா 51:9
இறாகாப்பை துண்டித்த்தும் உம் புயம் அல்லவா
வலு சர்பத்தை வதைத்ததும் உம் புயம் அல்லவா எமக்காய் யுத்தம் செய்யும் புயம் அல்லவா உம் புயம் அல்லவா
“கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்; அவர் அதிசயங்களைச் செய்திருக்கிறார்; அவருடைய வலது கரமும், அவருடைய பரிசுத்த புயமும், இரட்சிப்பை உண்டாக்கினது.”
— சங்கீதம் 98:1
பரிசுத்த புயமே பரிசுத்த புயமே
இரட்சித்து நடத்திட எழும்பு
ஓங்கிய புயமே ஓங்கிய புயமே
ஆளுகை செய்திட எழும்பு *2
“அநாதி தேவனே உனக்கு அடைக்கலம்; அவருடைய நித்திய புயங்கள் உனக்கு ஆதாரம்; அவர் உனக்கு முன்னின்று சத்துருக்களைத் துரத்தி, அவர்களை அழித்துப்போடு என்று கட்டளையிடுவார்.”
— உபாகமம் 33:27
நித்திய புயமே நித்திய புயமே
என்னை தாங்கி நடத்திட நீ எழும்பு
வல்லமையின் புயமே வல்லமையின் புயமே
சந்துருவை சிதறடிக்க நீ எழும்பு
பர்வதங்கள் உம்மை கண்டு நடு நடுங்கும்
பார்வோனின் சேனையும் பின் திரும்பும்
நீர் செய்ய நினைத்தது தடை படாது
தேவன் என் அடைக்கலமே
வெண்கல கதவுகள் உடைந்திடுமே
இரும்பு தாழ் பாழ்கள் உடைந்திடுமே
நீர் எழுந்தால் சத்துரு சிதறிடுவான் அவன் கதையை அழித்திடுவீர்
“அவர்கள் நடுவிலே தம்முடைய பரிசுத்த ஆவியை இருக்கக் கட்டளையிட்டு, மோசேயின் வலதுகையைக் கொண்டு அவர்களைத் தமது மகிமையின் புயத்தினாலே நடத்தி, தமக்கு நித்தியகீர்த்தியை உண்டாக்க அவர்களுக்கு முன்பாகத் தண்ணீரைப் பிளந்து,”
— ஏசாயா 63:12
மகிமையின் புயமே மகிமையின் புயமே
எம்மை நடத்தி எழும்பு
மகத்துவ புயமே மகத்துவ புயமே
எதிரிகள் அழிக்க எழும்பு
நீ எழும்பு
நீ எழும்பு எழும்பு எழும்பு எழும்பு
நீ எழும்பு எழும்பு நீ எழும்பு