Kiristhu em raayarae – கிறிஸ்து எம் ராயரே
1. கிறிஸ்து எம் ராயரே,
வந்தாளுகை செய்யும்
வெம் பாவம் நீங்கவே
செங்கோலைச் செலுத்தும்.
2. விரோதம் நீங்கியே
விண்போல மண்ணிலும்
தூய்மையும் அன்புமே
எப்போது செழிக்கும்?
3. உம் வாக்குக்கேற்றதாய்
வீண் போரும் பகையும்
சீர் கேடும் முற்றுமாய்
எப்போது ஒழியும்?
4. எழும்பும், கர்த்தாவே,
வல்லராய் வாருமேன்,
தாசர் தவித்தோமே,
வந்தாற்றித் தேற்றுமேன்.
5. உம் மார்க்கம் நாமமும்
பலர் பழிக்கின்றார்
துர் கிரியை பலரும்
நாணாமல் செய்கின்றார்.
6. தேசங்கள் யாவிலும்
மெய் பக்தி மங்கிற்றே
விண் ஜோதி வீசிடும்
மா விடி வெள்ளியே.