Kiristhuvin Udaintha Appam – கிறிஸ்துவின் உடைந்த அப்பம்
1.கிறிஸ்துவின் உடைந்த அப்பம்
என் வாழ்க்கை ஆகட்டும்
என் அன்பு ரசமாகவே
பொங்கி வழியட்டும்
பிறர் உண்டு புத்துணர்வாய்
வாழ்வில் பங்கு பெற
2. என் எல்லாம் எஜமான் கையில்
ஸ்தோத்தரித்துப் பிட்க
நதிக்கப்பால் ஆலை நிற்க
அங்கென் பாதைசெல்ல
என் தேவை யாவும் அவர்க்காய்
தர தீர்மானித்தேன்
3. உன் கிருபையை நான் பகர
அதில் நிலை நிற்க
செடி தாங்கும் பலன் யாவும்
மரித்த மணியால்
உம்மோடு சாகும் யாவரும்
உயிர்த்து வாழ்வரே