கொல்கதா மலை மீதிலே – Kolgatha Malai Meethilae
கொல்கதா மலை மீதிலே – Kolgatha Malai Meethilae
கொல்கதா மலை மீதிலே
சிலுவை சுமந்தேறினார் -2
உன்னத பிதாவின் சித்தமாய்
உத்தமர் ரத்தம் சிந்தினார் -2 – கொல்கதா
1. அந்தோ எருசலேமே
ஆண்டவர் பவனி வந்தார் -2
அந்த நாளை நீர் மறந்தாய்
அன்பரோ கண்ணீர் சிந்தினார் -2 -கொல்கதா
2. மேனியில் கசை அடிகள்
எத்தனை வசை மொழிகள் -2
அத்தனையும் அவர் உனக்காய்
அன்புடன் சுமந்து சகித்தார் -2 -கொல்கதா
3.வஞ்சக உலகினிலே
வணங்கா கழுத்துடனே-2
வலி போகும் மானிடனே
வந்திடாயோ ஏசுவண்டை-2 – கொல்கதா