இயேசுவே உம் பாசத்தால் – Yesuvae Um Paasathaal
இயேசுவே உம் பாசத்தால் நான் பாடி துதித்திடுவேன்
இயேசுவே உம் பார்வையால் நான் புதிதாகிறேனே..
உருவாகிறேனே..
உயர்வாகிறேனே..
உம் கருவாகிறேனே….
1st stanza
இயேசு நீர் என்னோடிருந்தால் உலகை மறந்திடுவேன்..
நீர் எனை நினைத்தால் உயரே எழும்பிடுவேன்..
நீர் என்னுள் வரும்போது..
உருவாகிறேனே..
உயர்வாகிறேனே..
உம் கருவாகிறேனே…
2nd stanza
மகிமையே என்னை மறந்திருந்தால்,
மண்ணுக்குள் மறைந்திருப்பேன்..
உம் கரங்களால் எனை எடுத்ததால்,
புது வாழ்வு பெற்று கொண்டேன்..
உம் சமுகம் எனில் வரும்போது … உருவாகிறேனே..
உயர்வாகிறேனே..
உம் கருவாகிறேனே…
3rd stanza
குயவனே நீர் வனையாதிருந்தால்,
குப்பையாய் கிடந்திருப்பேன்…
தேவனே எனை தொடாதிருந்தால் உயிரை தொலைத்திருப்பேன்..
உடைந்த நான் உங்க உள்ளங்கையில்..
உருவாகிறேனே..
உயர்வாகிறேனே..
உம் கருவாகிறேனே..