Kurusilae Marana paadugal குருசிலே மரண பாடுகள்
குருசிலே மரண பாடுகள்
நினைக்கையிலே நெஞ்சம் நெகிழுதே-2
எனக்காக தானே இதை ஏற்றுக்கொண்டீர்
உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே
1.எந்தன் அடிகள் எல்லாம்
உம் மேலே விழுந்ததே
என் சிந்தை மீறல்கள்
முள் முடியை தந்ததே-2
என்னை சிறப்பாக்கவே
சிறுமையானீரே
உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே
2.எந்தன் பாவ பாரத்தை
சிலுவையில் சுமந்தீரே
என்னை பரிசுத்தமாக்கவே
இரத்தம் சிந்தி மரித்தீரே-2
என்னை நீதிமானாக்க
நீர் நிந்தை ஏற்றீரே
உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே
3.எந்தன் தீய செயலினால்
ஆணி கரத்தில் பாய்ந்ததே
என் போக்கின் மீறலால்
கால்கள் கடாவப்பட்டதே-2
என்னை சுகமாக்கவே
நீர் காயப்பட்டீரே
உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே
4.என் தீய பேச்சினால்
கசப்பு காடியை ருசித்தீரே
என் இதய கடினத்தால்
விலாவில் ஈட்டி பாய்ந்ததே-2
எந்தன் ஆக்கினை தீர்க்க
அலங்கோலம் ஆனீரே
உம் அன்பை நான் என்ன சொல்வேன்-2-குருசிலே
Kurusilae Marana paadugal
Ninaikaiyile nenjam negizhuthe(2)
Enakaaga thanae
Ithai yetru kondeer
Um anbai naan
Enna solven(2)
Enthan adigal ellam
um mela vizhunthathe
En sinthai meeralgal
mul mudiyai thanthathe(2)
Ennai sirapaakave sirumai aaneere
Um anbai naan
Enna solven(2)
Enthan paava baarathai
siluvaiyil sumantheere
Ennai parisutham aakave
retham sinthi maritheere (2)
Ennai neethimaanaaka
neer ninthai yetrire
Um anbai naan
Enna solven (2)
Enthan theeya seyalinaal aani karathil paynthathe
En pokin meeralaal kaalgal kadaava patathe(2)
Ennai sugamaakave neer kaayapateere
Um anbai naan
Enna solven(2)
En theeya pechchinaal kasappu kaadiyai rusiththeere
En idhaya kadinaththaal vilaavil eetti paaithathe
Enthan aakkinai theerkka alangolam aaneere
Um anbai naan Enna solaven