Maa Jothi Thondrinaar – மா ஜோதி தோன்றினார்
மா ஜோதி தோன்றினார் இப்புவியில்
அவரே வழி அவரே ஜீவன் அவர் இரட்சிப்புமானவர்
அவரே ஒளி அவரே ஒலி அவர் எல்லாமானவர்
அன்பின் பால ஜோதியாய் பூவில் வந்துதித்தார்
அன்பின் இயேசு பாலனாய் மண்ணில் வந்துதித்தார்
அவர் அதிசயமானவர் அதிசயம்
அவர் அதிசயமானவர் அதிசயம்
அவர் அதிசயமானவர் அதிசயமானவரே
காரிருள் வேளையில் கடுங்குளிர் காலத்தில் பாலனாம் இயேசு பிறந்தாரே
ஏழ்மையில் தாழ்மையாய் மாடடை தெரிந்தார் இம்மானுவேலனாய் ராஜாவாய்பிறந்தார்
ஒப்பில்லா வேந்தர் மாமறை பரனாய் பாலனாம் இயேசு பிறந்தாரே பெத்லகேம்
முன்னணை பாலனாம் இயேசு நித்திய குணாளனாய் சேயாகப் பிறந்தார்