Maa Vaathaipatta – மா வாதைப்பட்ட
1.மா வாதைப்பட்ட இயேசுவே
அன்பின் சொருபம் நீர்
நிறைந்த உந்தன் அன்பிலே
நான் மூழ்க அருள்வீர்
2.தெய்வன்பின் ஆழம் அறிய
விரும்பும் அடியேன்
நீர் பட்ட கஸ்தி ஒழிய
வேறொன்றும் அறியேன்
3.என் மீட்பர் ஜீவன் விட்டதால்
பூமி அசைந்ததே
கன்மலை அதைக் கண்டதால்
பிளந்து விட்டதே
4.அவ்வண்ணமாய் என் நெஞ்சத்தை
பிளந்து தேவரீர்
உமது சாவின் பலத்தை
உணர்த்தக் கடவீர்
5.தூராசை நீங்கத்தக்கதாய்
தெய்வன்பை ஊற்றிடும்
கற்போன்ற நெஞ்சை மெழுகாய்
உருகச் செய்திடும்