MAANGAL NEERODAIYAI – மான்கள் நீரோடையை
MAANGAL NEERODAIYAI – மான்கள் நீரோடையை
மான்கள் நீரோடையை
ஆர்வமாய் நாடுதற்போல்
என் தேவனே என் ஆவி உம்மை
தாகமாய் தேடிடுதே
பேரின்ப நதியே
வாழ்வு தரும் வள்ளலே
தாகம் தீர்க்கும் நீரோடையே
நீர் இல்லா வாழ்வு தோல்விதானைய்யா
நீர் இல்லா உலகம் வெறுமைதானைய்யா
நீர் இல்லா உறவு மாயைதானைய்யா
நீரே என் சொந்தமாய் வந்துவிடுமைய்யா
உலகத்தின் அன்பெல்லாம் அன்பல்லவே
அன்பு என்ற சொல்லிற்கு அர்த்தம் இயேசுவே
எனக்காய் ஜீவன் தந்த அன்பல்லவோ
அவரின் அன்பிற்கு இணையுமுண்டோ
உம் சிறகுகளால் என்னை மூடிக்கொண்டீரே
உம் உள்ளங்கைகளில் என்னை வரைந்து கொண்டீரே
என் பாதம் இடராதபடி தாங்கிக் கொண்டீரே
வேறு என்ன வேண்டும் ஐயா இந்த உலகிலே
By
Enathellam Neerae Ministries
Bro. Andrew Joseph
Trichy – 620001
Mobile : 9524741482