மகிழ்ச்சி பண்டிகை – Magilchi Pandikai
மகிழ்ச்சி பண்டிகை – Magilchi Pandikai
1.மகிழ்ச்சிப் பண்டிகை கண்டோம்,
அகத்தில் பாலனைப் பெற்றோம்;
விண் செய்தி மேய்ப்பர் கேட்டனர்,
விண் எட்டும் மகிழ் பெற்றனர்.
2.மா தாழ்வாய் மீட்பர் கிடந்தார்,
ஆ! வான மாட்சி துறந்தார்;
சிரசில் கிரீடம் காணோமே,
அரசின் செல்வம் யாதுமே.
3.பார் மாந்தர் தங்கம் மாட்சியும்
ஆ! மைந்தா இல்லை உம்மிலும்;
விண்ணோரின் வாழ்த்துப்பெற்ற நீர்
புல்லணை கந்தை போர்த்தினீர்.
4.ஆ! இயேசு பாலன் கொட்டிலின்
மா தேசு விண் மண் தேக்கவே,
நள்ளிருள் நடுப் பகலாம்,
வள்ளல்முன் சூரியன் தோற்குமாம்.
5.ஆ! ஆதி பக்தர் தேட்டமே!
ஆ! ஜோதி வாழ்வின் விடிவே!
ஆ! ஈசன் திரு வார்த்தை நீர்!
தாவீதின் மைந்தன் கர்த்தன் நீர்.
6.பண்டிகை இன்றே வருவீர்,
திண்ணமாய் நெஞ்சில் தங்குவீர்;
ஓய்ந்த எம் கானம் மீண்டிடும்,
ஓய்வின்றி பூரித்தார்த்திடும்.
Magilchi Pandikai song lyrics in english
1.Magilchi Pandikai Kandom
Agaththil Paalanai Pettrom
Vin Seithi Meippar Keattanar
Vin Ettum Magil Pettanar
2.Maa Thaazhvaai Meetpar Kidanthaar
Aa Vaana Maatchi Thuranthaar
Sirasil Kreedam Kaanomae
Arasin Selvam Yaathumae
3.Paar Maanthar Thangam Maatchiyum
Aa Maintha Illai Ummilum
Vinnorin Vaazththu Pettra Neer
Pullanai Kanthai Poarththineer
4.Aa Yeasu Paalan Kottilin
Maa Theasu Vin Man Theakkavae
Nallirul Nadup Pagalaam
Vallal Mun Sooriyan Thoarkkumam
5.Aa Aathi Bakthar Theattamae
Aa Jothi Vaazhvin Vidivae
Aa Eesan Yhiru Vaarththai Neer
Thaaveethin Mainthan Karththan Neer
6.Pandikai Intre Varuveer
Thinnamaai Nenjil Thanguveer
Oointha Em Kaanam Meendum
Ooivintri Pooriththaarththidum