Piranthar Oor Palagan – பிறந்தார் ஓர் பாலகன்
1. பிறந்தார் ஓர் பாலகன்,
படைப்பின் கர்த்தாவே;
வந்தார் பாழாம் பூமிக்கு
எத்தேசம் ஆளும் கோவே.
2. ஆடும் மாடும் அருகில்
அவரைக் கண்ணோக்கும்
ஆண்டவர் என்றறியும்
ஆவோடிருந்த பாலன்.
3. பயந்தான் ஏரோதுவும்
பாலன் ராஜன் என்றே
பசும் பெத்லேம் பாலரை
பதைபதைக்கக் கொன்றே.
4. கன்னி பாலா வாழ்க நீர்!
நன்னலமாம் அன்பே!
பண்புடன் தந்தருள்வீர்
விண் வாழ்வில் நித்திய இன்பே.
5. ஆதி அந்தம் அவரே,
ஆர்ப்பரிப்போம் நாமே;
வான் கிழியப் பாடுவோம்
விண் வேந்தர் ஸ்தோத்ரம் இன்றே.