Manitha O Manitha – மனிதா ஓ மனிதா
Manitha O Manitha | மனிதா ஓ மனிதா
மனிதா ஓ மனிதா
நீ மண்ணாயிருக்கின்றாய் மண்ணுக்கே திரும்புவாய் -2
நினைவில் வை நினைவில் வை
நினைவில் வை ஓ மனிதா
இரக்கத்தின் காலம் இது என உணர்வோம்
இரக்கத்தின் பெருக்கையைத் தேடி பெறுவோம்
இறைவனை நினைப்போம் அவர் வழி நடப்போம்
இருள்தனைக் களைவோம் அருள்தனை அணிவோம்
கல்லான இதயம் நமக்கினி வேண்டாம்
கடவுளின் இதயம் நாம் பெற வேண்டும்
சாம்பலும் ஒருத்தலும் ஜெப தபம் யாவும்
சாவினை அழித்து வாழ்வினைக் கொணரும்