Manniyum Yesuvae Endhan – மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை

Deal Score0
Deal Score0

LYRICS: (TAMIL)

மன்னியும்…
E// 90 // 4/4

மன்னியும் இயேசுவே எந்தன் பாவங்களை
மன்னியும் நேசரே எந்தன் மீறுதலை
மன்னியும் இயேசுவே மன்னியும் என் நேசரே

1. அறியாமல் நான் செய்த பாவங்கள் மன்னியும்
புரிந்த மீறுதல் நீக்கிவிடும் – (2)
உடலால் உள்ளத்தாலே – என்
வாழ்நாளில் செய்த பாவங்கள்..
மலைபோல் வந்து நிற்குதே-உம்
இரத்தத்தால் கழுவுமய்யா…

2. உளையான சேற்றினில் மூழ்கிக்கிடந்தேன்
களைகளை வாழ்வினில் பெருகச்செய்தேன் -2
கனிகொடா மரம் போல் – நான்
வளர்ந்து நின்றேனய்யா
விளையாத பாழ்நிலம் போல்-உம்முன்
வெறுமையாய் நின்றேனய்யா

3. ஈசோப்பினாலே என்னைக் கழுவும்
உறைந்த மழையிலும் வெண்மையாவேன் -2
அக்கிரமம் நீக்கி என்னில் – சுத்த
இருதயம் சிருஷ்டித்திடும்
உம் கோபம் ஒரு நிமிஷம் – நித்ய
கிருபையாய் மனமிரங்கும்

4. உம் சமுகம் விட்டு என்னைத் தள்ளாதேயும்
தூய ஆவியை நீக்காதிரும் – 2
இரட்சண்ய சந்தோஷத்தை – என்னில்
திரும்பத் தாருமய்யா
உற்சாக ஆவி நித்தம் – என்னைத்
தாங்கச் செய்யுமய்யா


LYRICS: (ROMANISED)

MANNIYUM… E // 90 // 4/4

Manniyum Yesuvae Endhan PaavangaLai
Manniyum Nesarae Endhan Meeruthalai
Manniyum Yesuvae Manniyum En Nesarae

1. ARiyamal Naan Seitha PaavangaL Manniyum
Purintha MeeRudhal Neekividum – (2)
Udalaal ULLathaalae – En
VaazhnaaLil Seidha PaavangaL…
Malaipol Vandhu NiRkudhae- Um
Irathatthaal Kazhuvumaiyaa…

2. ULaiyaana SaetRinil Moozhgi Kidanthaen
KaLaikaLai Vaazhvinil Peruga Cheithaen -2
Kanikodaa Maram Pol – Naan
VaLarndhu Nintraenaiyaa
ViLaiyaatha Paazh Nilam Pol – Um Mun
Verumaiyaai Nintraenaiyaa

3. Eesoppinaalae Ennai Kazhuvum
URaintha Mazhayilum VeNmayaavaen -2
Ackiramam Neekki Ennil – Suttha
Irudhayam Sirushtithidum
Um Kobam Oru Nimisham – Nithya
Kirubaiyaai Manamirangum

4. Um Samugam Vittu Ennai ThaLLadhaeyum
Thooya Aaviyai Neeckaathirum – 2
IratchaNya Santhosatthai – Ennil
Thirumba Thaarumaiya
URchaaga Aavi Nittham – Ennai
Thaanga Cheiyumaiyaa

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo