Maranatha Yesuve Vaarumaiya – மாரநாதா இயேசுவே வாருமையா

Deal Score0
Deal Score0

Maranatha Yesuve Vaarumaiya – மாரநாதா இயேசுவே வாருமையா

Bb maj
மாரநாதா இயேசுவே வாருமையா-4
வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்
அழகான மணவாளனே
வாஞ்சிக்கிறோம் வரவேற்கிறோம்
மணவாட்டியாய் நாங்களே

1.ஜெபத்திற்கு ஜெயபதில் அளிப்பவரே
ஜெய பெலன் ஆனவரே
ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே
ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெபிப்பவரே
ஜெபத்தினை உகந்ததாய் ஏற்பவரே
ஜெய கிறிஸ்து எங்களுக்காய் ஜெயித்தவரே – வாஞ்சிக்கிறோம்

2.நித்திய மாட்சிமை உடையவரே
நிகரில்லா நீதிபரரே
நீரே என் இரட்சிப்பின் வழியானீரே
நீதியின் உடன்படிக்கை காப்பவரே-2 – வாஞ்சிக்கிறோம்

3.திரு இரத்தம் சிந்தி மீட்டவரே
திரு அப்பமானவரே
திரைசீலை இரண்டாக கிழித்தவரே
திரும்பவும் எங்களுக்காய் வருபவரே-2-மாரநாதா

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
christianmedias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo