நல்ல போர்ச்சேவகனாய் – Nalla Poar sevaganaai
நல்ல போர்ச்சேவகனாய் – வரும்
பாடுகளில் பங்கு பெறுவோம்
தேவன் தரும் பெலத்தால் வரும்
தீமைகளை தாங்கிடுவேன் – நல்ல
1. பக்தியோடு வாழ விரும்பும்
பக்தர்கள் யாவருக்கும்
பாடுகள் வரும் என்று
பவுல் அன்று சொல்லிவைத்தாரே- தேவன்
2.வேதனைகள் வழியாகத்தான்
இறையாட்சியில் நுழைய முடியும்
சிலுவை சுமந்தால்தான்
சீடனாக வாழ முடியும்
3. துன்பங்களை சுமக்கும் போதெல்லாம்
வெளிப்படுமே கிறிஸ்துவின் ஜீவன்
வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட
ஜீவகிரீடம் பெற்றுக் கொள்வோம்
4. இயேசுவின் நாமத்தினிமித்தம்
எல்லோராலும் பகைக்கப்படுவீர்கள்
என்று இயேசு சொல்லி வைத்தாரே
அதுதானே நடக்கிறது