நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம் -Nalliravu Nearam Bethlaham Ooram
பாடல் 17
நள்ளிரவு நேரம் பெத்லகேம் ஓரம்
பாலன் இயேசு இன்று பிறந்தார்
நடுக் குளிர் காலம் பனிவிழும் நேரம்
பரமன் இயேசு இன்று பிறந்தார்
Happy Christmas பாடு பாடு
Merry Christmas பாடு பாடு
1.கவிதைகள் மலர்ந்ததேனோ
இராகங்கள் பிறந்ததேனோ
தாளங்கள் உதித்ததேனோ
பாலன் இயேசுவையே போற்றவோ
2.மேகங்கள் பொழிவதேனோ – விண்
மீன்களின் சிமிட்டல் ஏனோ
நிலவின் சிரிப்பும் ஏனோ
பாலன் இயேசு வந்ததாலே
3.வானகம் துறந்ததேனோ
வையகம் வந்ததேனோ
தாழ்மையின் கோலம் ஏனோ
என் மேல் வைத்த அன்பு தானோ