நம் வாழ்க்கையாம் படகிலே – Nam Vaazhkaiyam padahile
நம் வாழ்க்கையாம் படகிலே – Nam Vaazhkaiyam padahile
நம் வாழ்க்கையாம் படகிலே
நம் தேவன் இருக்கின்றார்
அவருக்குக் காத்து இருக்கும் போது
ஒருபோதும் வெட்கப்படுவதில்லை
தேவன் நம்மை பெலப்படுத்தி
சகாயம் பண்ணுவார்
நீதியின் வலது கரத்தினால்
நம்மையும் தாங்கிடுவார்
தேவன் நம்மைப் பொல்லாதவர்களின்
கைக்குத் தப்புவிப்பார்
பலவந்தர்களின் கைகளுக்கு
நீங்கலாக்கி விடுவிப்பார்
கர்த்தர் நம்மை வாலாக்காமல்
தலையாக்கிடுவார்
நம்மை ஒருபோதும் கீழாக்காமல்
மேலாக இருக்க செய்வார்