Nantri Solli Paadida – நன்றி சொல்லி பாடிட
Nantri Solli Paadida – நன்றி சொல்லி பாடிட
நன்றி சொல்லி பாடிட
நீர் ஒருவரே பாத்திரார்
நன்மை செய்த இயேசுவே
நீர் ஒருவரே சிறந்தவர்
நீர் இல்லாமல் ஒரு நாளும் இல்லை
நீர் இல்லாமல் என் வாழ்வும் இல்லை
நீர் இல்லாமல் நான் நானும் இல்லை
என் எல்லாமும் நீரே – (2)
என்னை அழைத்தது நீங்க
முன் குறித்ததும் நீங்க
என்னை தெரிந்து கொண்டீங்க
என்றும் வழி நடத்துவீங்க – (2)
தரித்திரனாய் இருந்த என்னில்
தரிசனத்தை விதைத்தவர்
தகுதி இல்லா என்னையும்
உம் தயவால் நினைத்தவர் – (நீர் இல்லாமல்)
உருக்குலைந்து உடைந்த என்னை
உருவாக்க வந்தவர்
உதவாத என்னையும் நீர்
உயர்த்தியே வைத்தவர் – (நீர் இல்லாமல்)