நீங்கதான் எல்லாமே – Neengadhaan Ellame
நீங்கதான் எல்லாமே,
உம் ஏக்கம்தான் எல்லாமே-2
சித்தம் செய்யணுமா,
செய்து முடிக்கணுமே-2-நீங்கதான்
1. கரங்கள் பிடித்தவர்,
கைவிட்டு விடுவீரோ-2
இதுவரை நடத்தி வந்த
எபிநேசர் நீர்தானையா-2-சித்தம்
2. நீரே புகலிடம்
எனது மறைவிடம்-2
இன்னல்கள் வேதனைகள்
மேற்கொள்ள முடியாதையா-2-சித்தம்
3. என் மேல் கண் வைத்து
அறிவுரை கூறுகின்றீர்-2
நடக்கும் பாதைதனை
நாள்தோறும் காட்டுகின்றீர்-2-சித்தம்
4. கர்த்தருக்குள் மகிழ்கின்றேன்
களிகூர்ந்து துதிக்கின்றேன்-2
நீதிமானாய் மாற்றினீரே
நித்தம் பாடுகின்றேன்-2-சித்தம்
5. ஆனந்த தைலத்தினால்
அபிஷேகம் செய்தவரே-2
துதி உடை போர்த்தி
தினம் துதிக்கச் செய்பவரே-2-சித்தம்