Neer Maathram Pothumappa – நீர் மாத்திரம் போதுமப்பா

Deal Score+1
Deal Score+1

Neer Maathram Pothumappa – நீர் மாத்திரம் போதுமப்பா

யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதுமப்பா-2
எல்லோரும் இருப்பார்கள்
இல்லாமல் போவார்கள்
உலகத்தின் முடிவு வரை
என்னோடு இருப்பவரே-2

(ஓ..ஓ..) விலகாத தேவ கிருபை
மாறாத தேவ கிருபை-2
என் தகப்பனே தகப்பனே இயேசுவே-2
யார் இருந்தால் எனக்கென்ன
நீர் மாத்திரம் போதுமப்பா-2

1.தாயின் வயிற்றினிலே
என் கருவை கண்டவரே
அவயங்கள் உருவாகும் முன்
என்னை குறித்து அறிந்தவரே-2
உலக தோற்றம் முதல்
முன் குறித்து வைத்தவரே
உள்ளங்கையிலே-என்னை
வரைந்த தெய்வம் நீரே-2-விலகாத

2.உடைந்த மண்பாண்டம்
வீதியிலே கிடந்தேனே
அழகும் இல்லாமல்
உறுவற்று போனேனே-2
என்னை மீட்டெடுக்க
இறங்கி வந்த தெய்வம் நீரே
அழகும் சவுந்தர்யமும்
எனக்காக இழந்தவரே-2-விலகாத

3.துவக்கமும் முடிவும்
எல்லாமே நீர் தானே
ஆதியும் அந்தமும்
எல்லாமே நீர் தானே-2
உமக்கு மறைவான
சிருஷ்டி ஏதும் இல்லையப்பா
உம்மை விட்டால் உலகத்திலே
வாழ எனக்கு வழி இல்லப்பா-2-விலகாத

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
god medias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo