OOTRIDUME UNTHAN NALLA AAVIYAI – ஊற்றிடுமே உந்தன் நல்ல ஆவியை
OOTRIDUME UNTHAN NALLA AAVIYAI – ஊற்றிடுமே உந்தன் நல்ல ஆவியை
ஊற்றிடுமே உந்தன் நல்ல ஆவியை
நிரப்பிடுமே உந்தன் நல்ல கிருபையால்
பெந்தேகோஸ்தே நாளின் பெருவிழாவைப் போல
ஊற்ற வேண்டும் உந்தன் ஆவியால். -2
1. அக்கினி மயமான நாவுகள் எங்கள்
மேலே வந்து இறங்க வேண்டுமே -2
அந்நிய பாஷை பேசி ஆவியின் வரங்களால்
என்றும் எழும்பி ஜொலிக்க வேண்டுமே-2
2. மாம்சமான அனைவரின் மேலும்
விடுவேன் என்று சொன்ன ஆவியால்-2
மாம்சத்தின் கிரியை அளித்து சாம்பலாக்க
ஊற்ற வேண்டும் உந்தன் ஆவியால்-2
3. ஆவியில் நிறைந்து ஜெபிக்க வேண்டுமே
ஆவியில் நிறைந்து பேச வேண்டுமே -2
ஆவியில் நிறைந்து பாடித் துதித்து
இயேசுவின் பாதத்திலே நிற்க வேண்டுமே-2
4. அற்புதங்கள் அடையாளங்கள் வேண்டுமே
ஆத்தும பாரமும் வேண்டுமே -2
ஆயிரங்கள் உம்மண்டை திரும்பச் செய்ய வேண்டுமே
நிரப்பிடுமே உந்தன் ஆவியால்-2
5. மீட்கப்படும் நாளுக்கான ஆவியை
மீட்பின் நாள் வரையில் காக்க வேண்டுமே-2
மீட்கப்படும் நாளிலே மகிழ்ந்து களிகூரவே
மீட்பரோடு இணைய வேண்டுமே-2
இன்றைய மன்னா சங்கீதம் .27:5 தீங்குநாளில் அவர் என்னைத் தம்முடைய கூடாரத்தில் மறைத்து, என்னைத் தமது கூடார மறைவிலே ஒளித்துவைத்து, என்னைக் கன்மலையின்மேல் உயர்த்துவார்.