Oru Thaayaipola thettrukintra – ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே
ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே
ஒரு தகப்பனை போல் சுமக்கின்ற எந்தன் இயேசுவே
நீங்க தானய்யா என் ஜீவன் இயேசய்யா (2)
ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே….
என் இதயம் என்றுமே கலங்காதைய்யா
உம்மை தானே என்றுமே நம்புவேனைய்யா (2)
கைவிடாத தேவன் நீங்க தானய்யா (2)
நான் நடக்கும் வழியில் என்னுடன் வருவீரைய்யா (2)
ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே…
தகப்பனும் தாயும் என்னை கை விட்டாலுமே
என்னை கைவிடாத தேவன் நீங்க தானைய்யா (2)
உந்தன் மார்பிலே நானும் சாய்ந்து கொள்ளுவேன் (2)
என் மனக்கவலை எல்லாம் நான் உம்மிடம் சொல்வேன் (2)
ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே….
நான் அழுதால் உம் கண்கள் கலங்கும் இயேசப்பா
உம் இதயம் எனக்காக ஏங்கும் இயேசப்பா (2)
தனிமையிலே நான் இருந்தால் துணையாய் இருப்பீர் (2)
எப்பொழுதும் என் மேலே நினைவாய் இருப்பீர் (2)
ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே ஒரு தகப்பனை போல் சுமக்கின்ற எந்தன் இயேசுவே
நீங்க தானய்யா என் ஜீவன் இயேசய்யா (2)
ஒரு தாயை போல தேற்றுகின்ற அன்பு நேசரே….