Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான்
Oru Vaazhvuthan – ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான்
ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான்
இயேசையா உம் சித்தம் செய்திடத்தான்
1. தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
உமக்காகவே பிரித்தெடுத்தீர்
உலகம் தோன்றும் முன்னே
என்னை உம் பிள்ளையாய் கண்டீர்
ஒரு வாழ்வுதான் உமக்காகத்தான்
உம் சித்தம் செய்திடத்தான் – 2
2. மறுபடியும் பிறக்கச் செய்தீர்
மனக்கண்களை திறந்து விட்டீர்
பாவத்திற்கு மரிக்கச் செய்தீர்
என்னை உமக்காக வாழச் செய்தீர்
3. உம்மை அறியும் தாகத்தினால்
எல்லாமே நான் குப்பை என்றேன்
ஆசையாய் தொடர்கின்றேன்
என்னை அர்ப்பணித்து ஓடுகின்றேன்
4. உண்மையுள்ளவன் என்று நம்பினீர்
அப்பா உம் ஊழியம் செய்ய வைத்தீர்
பிரதான பாவி என்மேல்
நீர் காண்பித்த தயை பெரிது