Paalan Piranthar Paal Vennilavae Lyrics -பாலன் பிறந்தார் பால் வெண்ணிலாவே
பாலன் பிறந்தார்… பால் வெண்ணிலாவே…
மழலை இயேசுவை தாலாட்ட வா
சிணுங்கும் பனியே… சில்லென்ற காற்றே…
வணங்கிப் பணிந்தே சீராட்ட வா
விடிவெள்ளித் தாரகை விழி மின்னி ஜொலிக்க
விண்ணவர் மகிழ்ந்தே பண் பாடவே
குழு தநிதநிஸ தநிதநிஸ எங்கும் சந்தோஷமே
சரித்திரம் பிறந்தது என்றும் சந்தோஷமே
சரணம் – 1
அழகும் மகனின் வரவே வரமோ
அகிலம் செய்து புண்ணியமோ
அமைதி முகத்தில் விடியலின் ஒளியோ
அன்பின் முகவரி மண்குடிலோ
பாதை மாறும் மந்தையை மீட்டிடும்
அன்பின் ஆயன் இதோ
ஆயர்கள் கண்டார்கள் அங்கே ஒரு அதிசயம்
அளவில்லா இன்பத்தை கொண்டாடிட
பாமரன் பாதங்கள் தேடி பாலனை நான் போற்றுவோம்
சரணம் – 2
மன்னின் மடியில் பூவின் தளிரோ
புன்னகை மேலே ஒளிச் சுடரோ
புனித மகனின் புன்னகைத் துளியில்
பூமி புதிதாய் குளித்தெழுமோ
நேசம் கொண்ட நம்மை காத்திடும்
வாழ்வின் இதோ மீட்பர்
மனுகில பாவத்தை என்றென்றும் போக்கிட
மனுமகன் மண்ணில் பிறந்தார் இன்றே
பாக்களால் வாழ்த்துக்கள் பாடி
பூக்களால் கொண்டாடுவோம்