Paarppene En Nesarai Naan -பார்ப்பேனே என் நேசரை நான் Tamil Christian Song with Lyrics
Paarppene En Nesarai Naan -பார்ப்பேனே என் நேசரை நான்
பார்ப்பேனே என் நேசரை நான்
ஆர்ப்பரிப்பேன் நானு மந்நாள்
தீர்த்தார் என் கண்ணீர்கள் – யாவும்
சாற்றுவேன் நான் துதியே துதியே – பார்
1.பாரில் எந்தன் பாவம் தீர்த்தார்
பரத்தில் எந்தன் ஆவல் தீர்ப்பார்
அகத்திலே சந்தோசமளித்தார்
இகத்தி லென்றும் துதியே துதியே – பார்
2.ஆயிரங்களிற் சிறந்தோர்
ஆத்துமாவின் நேசராவர்
ஆபத்திலென் தோழனவர்
நாமத்திற்கே துதியே துதியே – பார்
3.எண்ணிறந்த தூதர் கூட்டம்
விண்ணினின்று போற்றும் நாளில்
அண்ணல் இயேசுவின்
அடிபணிந்தேன் பணிந்து சொல்வேன் துதியே துதியே
4.மண்ணின் சாயல் மாறியானும்
மகிமை யேறி மாசாற்றோனாய்
மன்னனோடு மணவறையில் மகிழ்வேன் என்றும் துதியே துதியே – பார்