Paavam RaththaamPara Maayinum – பாவம் இரத்தாம்பர மாயினும்
1. பாவம் இரத்தாம்பர மாயினும்
பஞ்சது போலாகுமே!
கருஞ் சிவப்பு தாயினும்
கர்த்தன் இரட்சை காண்பாயே!
பல்லவி
அல்லேலூயா நம் ஆண்டவர்
அருளுனக் கீவாரே!
வல்லவன் பூர்ண இரட்சையினால்
வெல்லும் வேந்தனாவாயே!
2. நெஞ்சத்தில் மறை துரோகம்
நீக்கி முற்றாய் இரட்சிப்பார்!
இயேசு இரத்தம் சுத்தி செய்யும்
மாசற்ற ஜீவன் தரும்!
3. பாவம் நெஞ்சிற் குடிகொண்டே
பாவி உன்னை ஆழ்த்தவே;
பரமன் வெளிப்படுத்தி
பாவமெல்லாம் போக்குவார்
4. உலகப் பேச்சுக் கஞ்சி நீ,
ஊக்க மற்றுப் போனாயோ?
உன் கூசல் சந்தேகங்களும்
உடன் போக்க வல்லாரே!