Paavi Un Meetpar Karisanai -பாவி உன் மீட்பர் கரிசனையாய்
1. பாவி உன் மீட்பர் கரிசனையாய்
அழைக்கிறார்! அழைக்கிறார்!
அலைந்து திரிந்து ஏன் கெடுவாய்?
இயேசுவின் இரட்சிப்பைப் பார்
பல்லவி
அழைக்கிறார்! அழைக்கிறார்!
விரும்பி வருந்தி உந்தனை அழைக்கிறார்!
2. இளைத்தும் தவித்தும் போனவனை
அழைக்கிறார்! அழைக்கிறார்!
நம்பிக்கையோ டவர் பாதம் தனை
சேருவாய் தள்ளமாட்டார் – அழை
3. தாமதமின்றி இந்நேரத்தினில்
வந்திடுவாய்! வந்திடுவாய்
பாவம் அறவே உம் நெஞ்சத்தினில்
வாழ்வையும் பெற்றிடுவாய் – அழை
4. விரும்பி வருந்தி அழைக்கிறார்!
ஓடியே வா! ஓடியே வா!
வந்திடுவோரைச் சந்தோஷிப்பிப்பார்!
உடனே உடனே வா! – அழை