Paavi Va Yesu Paava Mannippu – பாவி வாஇயேசு பாவமன்னிப்பு

Deal Score+1
Deal Score+1

Paavi Va Yesu Paava Mannippu – பாவி வாஇயேசு பாவமன்னிப்பு

பல்லவி

பாவி வா! இயேசு பாவமன்னிப்பு ஈவார்

சரணங்கள்

1. பாவியிற் பெரிய பாவியானாலும் – நீ
பயப்பட வேண்டாம்
பாவம் இரத்தாம்பரச் சிவப்பாயினும் வெண்
பஞ்சதாயாக்கிடுவார்! – பாவி

2. வெள்ளையடித்தோர் கல்லறை போலொத்த
வேஷம் வெகு மோசம்;
உள்ளமுடைந்து உணர்ந்தறிக்கை செய்தால்
உண்டு மன்னிப்புடனே! – பாவி

3. ஐயோ! நானென் செய்வேனென்று திகைத்து
அலைந்து திரியாதே
ஐயமில்லை அதிகமாக்கும் பாவங்களை
ஐயனேசு உதிரம்! – பாவி

4. வருந்திப் பாரம் சுமப்போரே என்னிடம்
வாரும் இளைப்பாறுதல்
தருவேன் என்றுன்னை அழைக்கிறாரிது
தருணம் தவறாமால் – பாவி

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo