பாவியே கெட்டுப்போகாதே – Paaviyae Kettu pogathae
பாவியே கெட்டுப்போகாதே – Paaviyae Kettu pogathae
1. பாவியே கெட்டுப்போகாதே!
ஏன் அலைகிறாய்?
இன்னும் கொஞ்சக் காலத்துள்ளே
ஜீவன் அழியும்!
பல்லவி
மரணம் வருது, வருது, வருது
லோக முடிவும்
பாவியோடு துரிதப்படு,
இரட்சிப்படைய
2. சாத்தானும் உன்னை விழுங்கக்
காத்து நிற்கிறான்!
பிராண நாதர் உன்னை மீட்க
அன்பாய் நிற்கிறார்! – மரணம்
3. மீட்பர் உன்னை அழைக்கிறார்
அல்லத் தட்டாதே
நரகத் தீ உன் பங்காகும்
மீட்பிழக்காதே – மரணம்
4. நியாயத் தீர்ப்பின் நாள் கிட்டுது
வாழ்நாள் ஓடுது!
பாவத்தை உணர்ந்து மீட்பர்
பாதம் வா இன்றே – மரணம்