Pandikai Kondaduvom – பண்டிகை கொண்டாடுவோம்

Deal Score0
Deal Score0

பல்லவி

பண்டிகை கொண்டாடுவோம்,-ஆம், நாம்
பண்டிகை கொண்டாடுவோம் .

சரணங்கள்

1. பண்டிகை கொண்டாடிப்,-பரமனைமன்றாடிப்
பஸ்கா கிறிஸ்தை நமஸ்காரஞ் செய்தாடி. – பண்டிகை

2. புன்மைகொடும் பொல்லாப்பு-புளிமா வைவிலக்கி
உண்மை பரி சுத்தமாம்-உயர்மா வைப்பலுக்கி – பண்டிகை

3. இன்றுயிர்த்தெ ழுந்தகோன்-இனிமரிப்ப தில்லையே
பொன்று மர ணஞ்சிறை-பூண்டாள்வ தில்லையே. – பண்டிகை

4. தரைபவத்திற் கென்றொரு-தரமரித்த னர்சுதன்
பரனவர்க்கு மகிமையாய்ப்-படிபிழைத் திருக்கிறார். – பண்டிகை

5. நாதன்போற் பாவத்திற்கு-நாமுமரிப் போமாகாப்
பேதமின்று யேசுவுக்குப்-பிழைத்திருப் போமாக. – பண்டிகை

6. கிறிஸ்தடக்கப் பட்டுமா-கீர்த்தியோ டேயெழுந்து
முறைமரித்த வர்களில்-முதற்பல னானாரே – பண்டிகை

7. மனுஷனாலு லகினில்-மரணமுண் டானதால்
மனுஷனாலே யுயிரெழில்-மகிமையுண்டானதே – பண்டிகை

8. ஆதத்தா லெல்லாரும்-அறமரித்தல் போலவே
நாதனால் மெய்யாக-நாமுயி ரடைகுவோம். – பண்டிகை

9. ஆதிபி தாகுமாரன்-ஆவிதிரி யேகர்க்கே
மாதிரி காலங்களாய்-மாமகிமை யாகவே. – பண்டிகை

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .

Tamil christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      christian Medias
      Logo