Parisutha Devan Neerae – பரிசுத்த தேவன் நீரே
Parisutha Devan Neerae – பரிசுத்த தேவன் நீரே
பாடல் வரிகள்
பரிசுத்த தேவன் நீரே
பரிகாரி தேவன் நீரே
என்றென்றும் ஆராதிப்போம்
இயேசுவின் திருநாமத்தை – நாம்
என்றென்றும் ஆராதிப்போம்
இயேசுவின் திருநாமத்தை
ஆராதிப்போம் ஆராதிப்போம்
அன்பரின் திருநாமத்தை
நீர் தந்த ஜீவன் இது – உமக்காக
ஒளி தருமே (2)
ஆராதிப்போம் ஆராதிப்போம்
ஆண்டவர் திருநாமத்தை
நான் செய்த பாவமெல்லாம்
மன்னித்து ஆணைப்பவரே
உம்மோடு நான் வாழவே
கிருபையை தந்தவரே
போற்றிடுவோம் போற்றிடுவோம்
இரட்சிப்பின் தேவனையே
உம்மைப்போல தேவனில்லை
உலகினில் பணிந்திடவே
சாரோனின் இராஜாவே
சகலமும் படைத்தவரே
போற்றிடுவோம் போற்றிடுவோம்
புண்ணியரின் திருநாமத்தை