Pirithedukkapattean Yesukakavae – பிரித்தெடுக்கப்பட்டேன் இயேசுவுக்காகவே
1. பிரித்தெடுக்கப்பட்டேன்
இயேசுவுக்காகவே,
ராஜன் ஆசார்யனுமாய்
அவரில் ஜீவிப்பேன்
தீமை யாவையும் விட்டு
சுத்தனாக்கப்பட்டேன்
முற்றிலும் ஒப்புவித்தேன்
என்னை தேவனுக்காய்
2. பிரித்தெடுக்கப்பட்டேன்
இயேசுவுக்காகவே,
என் இதய ஆலயம்
தம் பீடமாக்கினார்;
எமதைக்யம் எவரும்
பிரிக்க வொண்ணாதே,
ஜீவிப்பேன் நித்தியமாய்
அவர் வல்லமையால்
3. பிரித்தெடுக்கப்பட்டேன்
இயேசுவுக்காகவே,
அவரோடென்றும் தங்க
ஜெய ஆவி தாறார்;
வல்லமை தந்து காத்து
வழி நடத்துகிறார்
மேற்கொள்வேன் உலகை நான்
அவர் வல்லமையால்